Subramanya bhujangam
Subramanya Bhujangam 1 सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या । विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ॥१॥ ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா | விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி | விநாயகன் எப்பொழுதும் இளமைப் பருவ முடையோன். நம்முடைய மலை போன்ற தீவினைகளை நாம் அவனை வணங்கிய மாத்திரத்தில் பொடிப்பொடியாக்கி விடுவான். யானை முகனாயினும் பஞ்சவதனனாலும் (சிங்கத்தாலும், ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகத்தினையுடைய சிவனால்) மதிக்கப்படுகிறான். பிரம்மா முதலிய தேவர்களாலும் முனிவர்களாலும் தேடப்படும் கணேசன். அளவற்ற மங்களமுடையோனாகிய கணேசனின் அருைௗ நாடுவோமே. 2 न जानामि शब्दं न जानामि चार्थं न जानामि पद्यं न जानामि गद्यम् । चिदेका षडास्या हृदि द्योतते मे मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ।।2।। ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம் ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் | சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் || உன்னைத் துதிக்கக் குற